உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் - 12-ம் பகுதி)
“ உண்மைகள் உறங்குவதில்லை ” என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தின் பகுதியில் இன்று நாம் காண இருப்பது 12-ம் தீர்க்கதரிசனப் பகுதியாகும்.
இந்த 12-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது “துருக்கி நாட்டில் வரும் மாதத்தில் மிகப்பெரிய கொடிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாகவும், அச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடிய முறையில் கொல்லப்படுவார்கள்“ என்ற செய்தியை 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.
நமது சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு சோகச் சம்பவத்தை போன்று மற்றொரு சோகச் சம்பவம் உடனே நடக்கவிருப்பதாகவும், அச்சமயத்தில் மலேசியா நாட்டிலும் இது போன்ற ஒரு விபத்து உடனே நடக்க உள்ளதாகவும் 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
கனடா நாட்டில் மிகப்பெரிய அளவில் பூமி அதிர்வானது தற்போது ஏற்பட இருப்பதாகவும், அது ரிக்டர் அளவில் 7.7 ஆக இருக்கும் என்றும், அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு தருகின்றது.
சீனாவின் அத்துமீறல் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும், இதுவரை பொறுமை காத்த இந்தியா தற்போது ஒரு பதிலடியை கொடுக்க இருப்பதாகவும், இதனால் இந்தியா, சீனா இரு நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து உடனே நிறுத்துவதாக சீனா திடீரென்று அறிவிக்கும் என்றும், இதனால் இந்திய, சீன மக்களிடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
வரும் ஆடி அமாவாசை அன்று தென்தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்க இருப்பதாகவும், அது நடந்து முடிந்த 7வது தினத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள 37வது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில சம்பவங்கள் உடனே நடக்க உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இனி தென்தமிழகம் முழுவதும் பூமியிலிருந்து சாமி சிலைகள் கண்டெடுக்கப்படும் அதிசய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க உள்ளதாகவும், கீழடி அகழ்வராய்ச்சியில் நந்தி, சிவன் சிலைகள் கண்டெடுக்கும் சமயத்தில் தென்தமிழகத்தில் உள்ள ஒரு சிவலாயத்தில் மிகப்பெரிய அதிசயமொன்று நடைபெறும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“புரட்டாசி மாதம்“ கவனத்தில் கொள்ள வேண்டிய மாதம் என்றும், தமிழகத்திற்கு இது போதாத காலமாக இருக்கும் என்றும், பல முக்கிய சம்பவங்கள் துவங்கும் மாதமாக இம்மாதம் இருக்கும் என்றும், மூத்த தலைவர்கள் இறக்கும் காலமாக இது அமைய உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்திய தொலைக்காட்சி ஒன்றில் இந்தியாவில் நடக்கும் திடீர் சம்பவங்களைப் பற்றிய செய்திக் குறிப்புகளை இனி வெளியிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் நமது “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற வருங்கால தீர்க்கதரிசனத்தை பற்றிய விவாதங்கள் அதில் இடம் பெற்று மக்கள் மனதில் நமது தீர்க்கதரிசனங்கள் தனி இடத்தை பெறும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இறைவன் வரும் இறுதிசபை இந்தியாவில் எங்கு உள்ளது என்ற கேள்விக்கு விடைகாண உலகம் முழுவதும் இருந்து மக்கள் குழு இந்தியா நோக்கி படை எடுப்பார்கள் என்றும், அப்பொழுது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஒருவர் அந்த இறுதிசபையினை பற்றிய இரகசிய குறிப்பை அப்பொழுது செய்தி ஊடகங்களில் வெளியிடுவார் என்றும், இச்செய்தி 2018-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
வாடிகனிலிருந்து இறையாளன் இயேசுவின் வருகையைப் பற்றி ஒரு பகிரங்க செய்தியினை தற்போது வெளியிடுவார்கள் என்றும், அச்செய்தி வெளியிட்ட 7-வது தினத்தில் நாம் ஏற்கனவே “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் வெளியிட்டுள்ள 27வது தீர்க்கதரிசனத்தில் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு செய்தி நடக்க துவங்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“கல்கி“ அவதாரத்தைப் பற்றி பல செய்திகள் இனி ஊடகங்களில் வெளியிடப்படும் நடவடிக்கைகளை பல குழுக்கள் ஈடுபடும் என்றும், அப்பொழுது யாரும் எதிர்பாராத சமயத்தில் வடதேசத்திலிருந்து ஒரு ஆன்மீக அமைப்பு தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு ஆன்மீகக் குடிலில் கல்கியின் ஆன்மா இடம் பெற்றிருக்கும் என்ற ஒரு வியப்பான செய்தியினை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும், அச்சமயத்தில் பாரதப் பிரதமரின் ஒரு செயல் இந்தியாவில் பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
உலகில் உள்ள எரிமலைகளில் ஒரு சில வெடிக்க உள்ளதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சமடையும் என்றும், அதேசமயத்தில் பூமிதட்டு ஒன்று இடமிருந்து வலமாக நகரத்துவங்கும் என்றும், இதனால் கடல் மட்டத்தில் பல மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் உருவாகி உலக மக்களை அச்சுறுத்தும் நிகழ்வு தற்சமயம் நடக்க உள்ளதாகவும், “பிலிப்பைன்ஸ்“ நாடு மிக, மிக கவனத்தில் இருக்க வேண்டிய நாடு என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
திபெத்தியன் புத்தலாமா ஒருவருக்கு கொலை மிரட்டல் வரும் என்றும், இதனால் திபெத் நாட்டில் உள்ள புத்த மடாலயங்களில் ஒரு பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் என்றும், வரும் நவம்பர் மாதம் அங்கு ஒரு சோகச் சம்பவம் நடந்தேறிடும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“இந்திய திருநாட்டில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களில் உள்ள கருவறைகளில் இனி பல அதிசயங்கள் தென்படும் என்றும், “முக்திநாத்“ மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு ஆலயம் உள்ள தென்பகுதியில் “பூமி சார்ந்த ஒரு நிகழ்வு உடனே நடக்க இருப்பதாக 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
போலிச்சாமியார் ஒருவன் தமிழகத்தின் காவல்துறையால் தற்போது கைது செய்யப்படுவான் என்றும், அவனின் பின்ணணியில் பல அரசியல்வாதிகள் இடம் பெற்றுள்ள செய்திகள் இனி ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிடுவார்கள் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் யாவும் வரப்போகும் ஒரு பேராபத்திற்கான சமிக்கைகள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், சென்னை, மகாபலிபுரம், கடலூர், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கேரளா, கிழக்கு கடற்கரை பகுதிகள் மிகுந்த கவனத்தில் கண்காணிக்கப்பட வேண்டிய பகுதிகள் என 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
கடலில் ஒரு மிகப்பெரிய அதிசயம் ஒன்று தென்படும் என்றும், அது பசிபிக் கடலில் நடக்க உள்ள அதிசயமாக இருக்கும் என்றும், உலக விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைக்கக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
முன்னணி நடிகர் ஒருவருக்கு இது போதாத காலம் என்றும், திடீர் ஒரு சம்பவத்தால் அந்த நடிகர் பெரிதும் பாதிப்பு அடைவார் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு செய்தியினை இங்கே வெளிப்படுத்துகிறது.
“ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள 49-ம் தீர்க்கதரிசனத்தை நாம் இப்பொழுது முழுமையாக நினைவில் கொள்ள வேண்டும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.
“உண்மைகள் உறங்குவதில்லை“ அது மக்கள் மனதில் இனி நிலைப்பெற்று ஜோதியாக மிளிரும் என்றும், அதுவரை நிகழ்வுகளை ஆழமாக கவனிப்போம் என 12-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment