உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 7)
“உண்மைகள் உறங்குவதில்லை” என்ற இந்த தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெறும் தீர்க்கதரிசனம் 7-ம் பகுதியாகும். இந்த 7-ம் தீர்க்கதரிசனம் உலகத்தில் இனி நடக்ககூடிய பல சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உள்ளது.
இந்த 7-ம் தீர்க்க தரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது என்னவெனில் அமெரிக்க நாட்டில் உள்ள தென் மாகாணத்தில் பல திடீர் சம்பவங்கள் தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட உள்ளதாகவும், “வாட்டிகன்“ என்ற நகரத்தில் இரண்டாம் போப் வாழ்ந்த பகுதியில் திடீரென்று ஒரு வியப்பான சம்பவம் நடக்கும் என்றும் இதனால் உலகம் வியப்பில் ஆழ்ந்து போகும் சம்பவங்களாக இந்த இரண்டு சம்பவங்கள் அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பை தருகின்றது.
கனடா நாட்டில் “வான் ஊர்தி“ ஒன்று தரையிறங்கும் சம்பவம் நடக்கும் என்றும், அதில் பல வியத்தகு அதிசயங்கள் காணப்படும் என்றும் 2017, 2018 ஆண்டில் நடக்கும் இரட்டைச் சம்பவத்திற்கு இது ஒரு ஒத்திகை நிகழ்வாக இருக்கும் என “NASA" கருத்து தெரிவிக்கும் அளவிற்கு இச்சம்பவம் அமையும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.
“பாபிலோன்“ (பாபிலோனியா) கவனத்தில் கொள்ள வேண்டிய வரலாற்று பகுதி என்றும், இறை தூதுவர்கள் தென்படும் அதிசய நிகழ்வுகள் அங்கு உடனே நடக்க உள்ளதாகவும், இச்செய்தி “மீடியாக்களில்“ வேகமாக பரவும் என்றும், அச்சமயத்தில் வானத்தில் பலமணி நேரம் ஒளி பந்துக்கள் வலம் வரும் அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
மலேசியா நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்ய உள்ளதாகவும், JULY மாதத்தில் அது அரங்கேறிட உள்ளதாகவும், மலேசியாவின் வடக்கு பகுதி பெருமளவு பாதிப்புக்குள்ளாகும் என்றும், இனி அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“ஜெனிவா“ கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு மக்களின் கூட்டத்தில் ஒரு பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் என்றும், அங்கு தோன்றும் இனக்கலவரம் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் என்று 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை உலக மக்களுக்கு தெரிவிக்கின்றது. அதாவது வரும் மாதத்தில் அங்கு ஏற்படும் பூமி அதிர்வானது 8.1 முதல் 8.9 என்ற வீரியம் அளவில் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிட உள்ளதாகவும், இது முந்தைய அழிவைவிட அதிகமாக இருக்கும் என 7-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கையை செய்கிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் வடபகுதியிலிருந்து ஒரு பூமி அதிர்வு துவங்கி வடகிழக்கு வழியாக பயணித்து தென் பகுதியில் இது முடிவடையும் சமயத்தில், அங்கு மிகப்பெரிய அழிவுச் சம்பவம் நடந்தேறி இருக்கும் என 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு அழிவுச் செய்தியை நமக்கு தெரிவிக்கின்றது.
“உபஸ்தான்“ (உஸ்பெகிஸ்தான்) என்ற நிலப்பரப்பில் பல்வேறு பூமி சம்பந்தப்பட்ட “திரட்டுகள்“ கண்டறியப்படும் என்றும், முஸ்லீம் இனத்தவர் என்ற அடையாளம் உள்ள இப்பகுதியில் புத்தரின் இரகசியக் குறிப்புகள் அங்கு கண்டெடுக்கப்படும் சம்பவம் இந்திய தேசத்தின் வரலாற்று உண்மைகளை அறியும்படி அமைய உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
“ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ள 37-ம் தீர்க்கதரிசனத்தை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அதில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகள் உடனே நடக்க உள்ளதாகவும், வான்வெளி சம்பந்தமுள்ள ஒரு சம்பவம் இந்தியாவின் தென்பகுதியில் நடக்க உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இம்மாத இறுதியில் அரபிக்கடலில் உருவாகும் புயல் இந்திய தேசத்தில் பலத்த சேதங்களை உருவாக்கிட உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் சமீபத்தில் நடக்க உள்ள ஒரு சோக சம்பவத்தை நமக்கு எச்சரிக்கை செய்தியாக இங்கு சுட்டிக் காட்டுகின்றது.
வரும் ஆகஸ்ட் மாதம் மக்கள் மனங்களில் பல திடுக்கிடும் சம்பவங்களின் நினைவுகளை ஏற்படுத்தும் மாதமாக அமைய உள்ளதாகவும், கலிபோர்னியா, அண்டார்டிகாவின் தென்பகுதி, வெனிசுலா, கம்போடியா, தாய்லாந்து, உக்கரைன் போன்ற நிலப்பரப்புகளில் பூமி, கடல் சார்ந்த பல நிகழ்வுகள் நடக்க உள்ளதாக 7-ம் தீர்க்கதரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.
உலகத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கக்கூடிய இறை அவதாரத்தின் ஆத்மா ஒரு உடலில் தஞ்சம் கொள்ளும் அதிசய நிகழ்வு வரும் மாதத்தில் நடக்க உள்ளதாகவும், இது சித்தர்களின் தவப்பயனால் ஏற்படக்கூடிய அதிசய நிகழ்வாக அமைய உள்ளதாகவும், அந்த இறை அவதாரத்தின் நோக்கம் இனி பூலோகம் முழுவதும் நடைபெறும்விதமாக பல அதிசய சம்பவங்கள் பூமி மற்றுமின்றி வான்தேசங்கள் முழுவதும் நடக்கும் அளவிற்கு அமைய உள்ளதாகவும், சத்திய யுகத்தின் பொன்னான நாளாக இந்நாள் கருதப்படும் என்றும், வரலாற்றில் இதுவே சிறப்பு வாய்ந்தது என 7-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
ஒரு ஓலைச்சுவடியால் ஒரு ஊரே கவலைபடும்படி மாற உள்ளதாகவும், இச்செய்தி காட்டு தீ போல ஊர் முழுவதும் பரவும் சமயத்தில் ஆன்மீக குடில் ஒன்றில் பல வியப்பான சம்பவங்கள் நடைபெறும் என்றும், அச்சமயத்தில் மூவரின் வருகை ஏற்படும் என்றும், இதனை விளக்கமாக மக்கள் அறிய விரும்பி அங்கு கூட்டம், கூட்டமாக படையெடுப்பார்கள் என்றும், அச்சமயத்தில் வான் மண்டலத்தில் ஒரு “கிரகணம்“ ஏற்படும் என்றும், இந்த கிரகணம் இந்த பூமி பல சம்பவங்களை எதிர் நோக்கி உள்ளதற்கான அறிகுறியாக இருக்கும் என்று 7-ம் தீர்க்கதரிசனம் மக்களுக்கு எடுத்து கூறும் இச்சமயத்தில், “உண்மைகள் உறங்குவதில்லை“ அது உலகத்தில் நடந்த வண்ணமே உள்ளது என மக்கள் நம்புவார்கள் என 7-ம் தீர்க்கதரிசனம் நமக்கு தெளிவுபட எடுத்துக் கூறுகிறது.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment