உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 6)
(தீர்க்கதரிசனம் பகுதி - 6)
தீர்க்கதரிசனத்தின் எஞ்சிய பகுதிகள் இனி “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இப்பகுதியில் இடம் பெற உள்ளன.
நாம் வெளியிட்ட அனைத்து தீர்க்கதரிசனங்களும் செயல்படும் காலம் வந்துவிட்டன. உலக மக்களின் மனதில் மரணப் பயங்கள் தென்படும் அளவிற்கு சம்பவங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்க போகின்றன என 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு ஒரு குறிப்பை தருகின்றது.
இன்றைய 6-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் பல செய்திக் குறிப்புகள் தீர்க்கதரிசனங்களாக நாம் காண இருக்கின்றோம். அதில் முதலாவதாக “வாணியம்பாடி“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பகுதி என்றும், நகரத்தின் தெற்குவாசல் என்ற அடைமொழி கொண்ட ஒரு இடத்தில் நடக்கும் சம்பவம் தமிழக மக்களை நிலைகுலையச் செய்யும் என்று இந்த தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவாலயத்தில் நடக்கும் ஒரு திகில் சம்பவம் அது சென்னை நகருக்கு வரப்போகும் ஆபத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு மற்றொரு குறிப்பை தருகிறது.
6-ம் தீர்க்கதரிசனத்தில் இமயத்தில் ஏற்படும் ஒரு பூமி அதிர்வானது 7.8ஆக இருக்கும் என்றும், இது வடதேசத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், இதன் தாக்கத்தை இந்திய விஞ்ஞானிகள் முன்பே கண்டறிந்து எச்சரித்தாலும் மக்களின் கவனக்குறைவால் பல விபரீதங்கள் நடக்க உள்ளதாக மேற்கண்ட தீர்க்கதரிசனக் குறிப்பு நமக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றது.
காலம் சென்ற தமிழ் புலவர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சீத்தலைசாத்தனார் என்ற புலவரின் கல்வெட்டு ஒன்று தமிழகத்தில் கண்டெடுக்கும் சமயத்தில் ஆகாய மார்க்கத்தில் ஒரு வான்ஊர்தியை இந்திய மக்கள் பலரும் காணும் பாக்கியத்தை பெறுவார்கள் என்றும், இந்த சமயத்தில் தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை போன்ற பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடும் சம்பவம் நடக்கும் என்று இந்த 6-ம் தீர்க்கதரிசனம் ஒரே சமயத்தில் நிகழப்போகும் பல சம்பவங்களை நமது கவனத்திற்கு கொண்டு வருகிறது.
“ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்றுள்ள 36-ம் தீர்க்கதரிசனப் பகுதியை நாம் இப்பொழுது திரும்பி நினைவில் கொள்ள வேண்டும் என்றும், ஆகாயச் சூரர்கள் என்ற ஒரு நிலையை இஸ்ரேல் காண உள்ளதாகவும், இறைமகன் இயேசுவின் வருகைக்கான முதல் நிகழ்வு அங்கே அரங்கேறிடும் என்ற ஒரு தகவலை கிருஸ்துவ தலைமை அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிடும் சமயத்தில் தமிழகத்தில் ஒரு மாபெரும் அதிசய நிகழ்வு நடக்க உள்ளதாக “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனத்தின் உண்மைத்தன்மையை உலக மக்கள் அறிவார்கள் என ஒரு குறிப்பு நமக்கு இங்கே நினைவூட்டப்படுகிறது.
காலம் சென்ற விஞ்ஞானியும், மெய்ஞானியுமான “ஐன்ஸ்டீன்“ என்பவரின் கல்லறையை பலர் தோண்டி பல அறிவியல் சாராத திடுக்கிடும் செய்திக் குறிப்புகளை வெளியிடுவார்கள் என்றும், அவரின் கல்லறைக்குள் ஒரு இரகசிய வழி ஒன்றை கண்டறிந்து அதன்வழி சென்று ஒரு அரிய புத்தகத்தை கைப்பற்றி அதில் இடம் பெற்றுள்ள குறிப்புகளை உலக மக்களுக்கு அறிவிக்கும் அன்றைய தினத்தில், உலகம் வியக்கும் மற்றொரு அதிசயம் லண்டன் மாநகரில் நடக்கும் என்று 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு அரிய குறிப்பை இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
டிசம்பர் 2017 நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மாதம் என்றும், தமிழக அரசியல்வாதிகளுக்கு இது போதாத காலம் என்றும், இந்திய அரசியல்வாதிகளே பலர் வியக்கும் பல சம்பவங்கள் நடக்கும் காலமாக அது இருக்கும் என்றும், இது துவக்கத்தின் முதல் காலம் என்று மக்கள் அறிய வேண்டும் என 6-ம் தீர்க்கதரிசனம் நமக்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.
“சிங்காநல்லூர்“ மீண்டும் மக்களால் கண்டறியப்படும் ஒரு நிகழ்வு நடக்க உள்ளதாகவும், வரலாற்று சின்னமாக கருதப்படும் ஒரு சிலைக்காக மக்கள் கொந்தளித்து எழும் ஒரு எழுச்சி நிகழ்வு அங்கு நடக்க உள்ளதாக 6-ம் தீர்க்கதரிசனம் நமக்கு குறிப்பை தருகின்றது.
மேல் உலகவாசிகளான வேற்றுகிரக வாசிகளை மக்கள் காணுகின்ற பல நிகழ்வுகள் இந்திய தேசமின்றி உலக நாடுகள் முழுவதும் நடந்தேறும் ஒரு அரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளதாகவும், இந்திய தேசத்தின் மேற்கு பகுதியில் கனமழை ஒன்று ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்துவதோடு பல நதிகள் உடைபடும் நிகழ்வு நடக்க உள்ளதாக 6-ம் தீர்கதரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.
ஸ்ரீஇராமனுஜர் வாழ்ந்த பகுதியிலிருந்து சித்தர் ஒருவரின் அற்புதம் மக்கள் மத்தியில் எழும் என்றும், அப்பொழுது திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு மாற்றம் திடீரென்று நிகழும் என்றும், அப்பொழுது ஜீயர் ஒருவர் மக்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு செய்தி குறிப்பை வெளியிடுவார் என்றும், அதன்படியே அந்த நிகழ்வு திருப்பதியில் நடந்தேறும் என்ற குறிப்பை 6-ம் தீர்க்கதரிசனம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
தமிழகத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தை அரசு கைப்பற்றும் நிகழ்வு 2018-ம் ஆண்டில் நடந்தேறும் என்றும், அங்கு புதைக்கப்பட்ட பல மர்மங்கள் உலகத்திற்கு தெரிய வரும் என்றும், அதே சமயத்தில் அம்மன் குடிகொண்டுள்ள ஒரு ஆலயத்தில் அதிசயம் ஒன்று நடந்தேறும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.
செவ்வாய் கிரகத்தில் வாழும் வேற்றுகிரகவாசிகளைப் பற்றி “ NASA ” ஒரு இரகசிய பிரமாணத்தை உலக மக்கள் அறியும்படி வெளியிடும் என்றும், அதே சமயத்தில் திபெத்தில் உள்ள புத்த மடாலயத்தில் “வேற்றுகிரக வாசியின் உடல்“ ஒன்றை அங்கு உள்ள புத்த சன்னியாசிகள் பாதுகாத்து வரும் செய்தியை ஆதாரத்துடன் ஒரு சந்நியாசி வெளியிடுவார் என்றும், இதனால் உலக மக்கள். வேற்றுகிரக வாசிகள் நிச்சயம் உள்ளனர் என்ற நம்பிக்கைக்கு வருவார்கள் என 6-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு முக்கிய அரியச் செய்தியை வெளியிடுகிறது.
சேலம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமையப் பெற்றுள்ள முருகன் ஆலயத்தில் ஒரு சுரங்கம் கண்டறியப்படும் என்றும், அதன் பாதையை பல மக்கள் கண்டறிந்து வியப்பார்கள் என்றும், அங்கு பல ஓலைச்சுவடிகளை கண்டெடுப்பார்கள் என்றும், அதில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் யாவும் அடுத்து 3000 ஆண்டுகள் இவ்வுலகில் நடக்கும் மாற்றங்களை கணித்து எழுதப்பட்ட குறிப்புகள் அதில் இடம்பெற்றிருக்கும் என்றும், அதில் கூறப்பட்ட பல குறிப்புகள் தற்போது நாம் வெளியிடும் நமது தீர்க்கதரிசனப் பகுதியோடு ஒத்துப் போகும் என்றும், அதை எழுதியவர்கள் யார்? என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
நிகழ்வுகள் நிகழ்கின்ற காலமாக இக்காலம் இருக்கும் என்பது உண்மையாக இருக்கும்பட்சத்தில் “உண்மைகள் உறங்காது“ அவை ஒருநாள் இவ்வுலகில் வலம் வருவதை நாம் காண்போம் என்றும், அதுவரை நாம் காத்திருப்போம் என 6-ம் தீர்க்கதரிசனம் நமக்கு ஒரு குறிப்பை சுட்டிக் காட்டுகின்றது.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment