ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரின் மூன்றாம்
பாகத்தில் இடம் பெறும் தீர்க்கதரிசனங்களை பற்றி இங்கு காண்போம். தீர்க்கதரிசனங்கள்
என்பவை எவை? அவை எப்படி மனிதனால் கூற முடிகிறது? என்ற கேள்விகளுக்கு பல லட்சக்கணக்கான
மக்களும், மெய் ஞானிகளும் இன்றுவரை அதற்கான விடையை தேடி வருகின்றனர், தனது ஆழ்மனதின்
மூலமாக மனிதன் உணர்ந்து சொல்லக்கூடிய விஷயங்களுக்கு “தீர்க்கதரிசனங்கள்” என்று அர்த்தமல்ல,
அவைகளுக்கு பெயர் வேறு, அதாவது ஆழ்மனதின் சக்தி அலைகளால், சில நேரத்தில் நடக்கும் ஒரு
மனிதனின் தனிப்பட்ட செயல்களை பற்றி தெரிவிக்கும் ஆழ்மனதின் பதிவுகளே இவைகளாகும். இது
தனி ஒரு மனிதன் தனது ஆழ்மனதின் வழியாக மற்றொரு மனிதனின் ஆழ்மனதிற்குள் மறைந்துள்ள செய்திகளை
தனது ஈர்ப்பு சக்தியினால் உட்கவர்ந்து சொல்லக்கூடிய மனோசக்தி ஆற்றலே இதுவாகும்.
ஆகையால் தீர்க்கதரிசனம் என்பது முற்றிலும் வேறானது,
அதாவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியானது மனிதனுடைய “பீனியல்” சுரப்பியின் செயல்பாட்டோடு இணைந்து அவனின் மூளைக்குள் உலகியல்
செய்திகளை மின்காந்த அலைகளாக செலுத்தப்பட்டு அது அவனிடமிருந்து உரிய காலக்கட்டத்தில்
அந்த அற்புத சக்தியால் மீண்டும் இயக்கப்பட்டு சொல்லப்படும் விஷயங்களே இங்கு தீர்க்கதரிசனங்கள்
என்று சொல்லப்படுகின்றன.