ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 2)
(இரண்டாம் தீர்க்கதரிசனம்)
“நமது சத்திய யுகம்“ வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனப் பகுதி இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதியாகும். இதில் பல்வேறு செய்திக்குறிப்புகள் இடம்பெற உள்ளன. அவைகளை இங்கு நாம் காண்போம்.
இன்றைய இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதியில் முதலாவதாக இடம்பெறும் தீர்க்கதரிசனம் என்னவெனில் அயல்நாட்டில் உருவாகும் மிகப்பெரிய சோகச்சம்பவம் மனிதஉயிர்கள் மடிந்து போகும் நிகழ்வுகளால் உலக அழிவதற்கான முதல் சுவடு என தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றன. மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயச்சூழல் ஒன்று இந்த நிகழ்வின் மூலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சத்தியயுக வருங்கால தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு ஒரு செய்திக் குறிப்பை சுட்டிக்காட்டுகின்றது.
மயிலாடுதுறை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், அங்கிருந்து பல வினோத செய்திகள் இனி தமிழகம் எங்கும் வலம்வர உள்ளதாகவும், காயிதேமில்லத் மாவட்டத்திலிருந்து சில புரட்சிகரமான ஆன்மீகச்செய்திகள் இனி வர உள்ளதாகவும் தீர்க்கதரிசனச் செய்திக்குறிப்புகள் தீர்க்கமாக தெரிவிக்கின்றன.
செஞ்சிலுவை சங்கத்தின் குறியீடு போன்று அமைந்துள்ள ஒரு சின்னத்தை அடையாளமாகக் கொண்ட சமூக அமைப்பு ஒன்று மக்கள் மன்றத்தால் பெரிய அளவில் தண்டிக்கப்பட உள்ளதாக சத்திய யுக தீர்க்கதரிசனங்கள் நமக்கு தெரிவிக்கும் ஒரு முக்கிய செய்திக்குறிப்பாகும்.
தமிழக அரசியல் களத்தில் பல திடீர் அதிரடி மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகவும், இந்த மாற்றங்கள் மக்கள் சமூகத்திற்கு ஏற்புடையது அன்று என்றும், இதனால் பல குழப்பமான சூழ்நிலைகள் உருவாகி மக்கள் நசுக்கப்படும் பல்வேறு சூழ்நிலைகள் உருவாகப் போவதாக சத்திய
கலிலியோ வாழ்ந்த ஒரு நகரத்தில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இறை சார்ந்த அதிசயம் ஒன்று வெளிவர உள்ளதாகவும், போப் ஒருவரின் அறிக்கை உலக கிறிஸ்துவ மக்களுக்கு பெரும் நம்பிக்கை ஊட்டும் செயலாக இது இருக்கும் என செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் திடீரென்று ஒரு இனக்கலவரம் தோன்றி மக்கள் சமூகத்தையே நிலை தடுமாறிடும் சூழலை உருவாக்கி அங்கு, பல குழப்பமான அரசியல் சூழ்நிலைகளும், பல நெருக்கடி பிரகடனங்களும் உருவாகும் சூழல் ஒன்று மிக, மிக சமீபமாக நடக்க உள்ளதாக சத்தியயுக வருங்கால தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கும் ஒரு உண்மை நிகழ்வாகும்.
“கருவூர்“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்றும், அங்கு மக்கள் கும்பல் கும்பலாக ஒரு இடத்தை நாடி செல்லும் அவல நிலை ஏற்படும் என்றும், அதன்பிறகு அவர்கள் தேடி சென்ற அந்த இடம் மக்களால் பயங்கரமாக சூறையாடப்படும் ஒரு அசம்பாவித நிகழ்வு நடக்க உள்ளதாக ஒரு தீர்க்கதரிசன செய்திக்குறிப்பு இங்கே தெரிய வருகிறது.
உண்மைகள் உறங்குவதில்லை என்ற ஒரு நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெற்ற 7-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு செய்திக்குறிப்புகள் தற்போது நடக்கும் காலமாக இது இருக்கும் என சத்திய யுக இரண்டாம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு ஒரு செய்திக்குறிப்பை இங்கே தருகின்றது.
காலம் சென்ற நடிகர் ஒருவரின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஒரு நடிகர் நடந்துகொள்ளும் ஒரு கேடுகெட்ட சம்பவம் ஒன்று தற்போது நடக்க இருப்பதாகவும், தமிழக திரைஉலகிற்கு இது ஒரு அவப்பெயராக அமைய உள்ளதாக சத்திய யுக தீர்க்கதரிசனம் ஒரு செய்திக் குறிப்பை தருகின்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நமது கவனத்திற்கு உரிய ஒன்று என்றும், அது இன்னும் சில நாட்களில் புதுப்பிக்கும் வேலைகள் துவங்கிட உள்ளதாகவும், அப்பொழுது அங்கு பல இறை அதிசயங்கள் நிகழ உள்ளதாகவும் மக்கள் மத்தியில். இது மிக பிரபலமாக பேசப்படும் என்ற செய்திக்குறிப்பை இந்த வருங்கால தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு தெரிவிக்கும் அதிசய செய்திக்குறிப்பாகும்.
மாநிலங்கள் அவையில் இடம்பெற்ற மூத்த அரசியல்வாதி ஒருவரின் பகீரங்க அறிவிப்பால் இந்திய நாட்டு மக்கள் விழிபிதுங்கி நிற்க உள்ள ஒரு சம்பவம் உடனே நடக்க உள்ளதாக வருங்கால தீர்க்கதரிசனச் செய்திகள் நமக்கு இங்கே முக்கிய ஒரு குறிப்பை தெரிவிக்கின்றன.
சமுதாயத்தில் மிகுந்த அந்தஸ்து பெற்ற நடிகர் ஒருவரின் அரசியல் கொள்கை அறிவிப்பு நிகழ்ச்சியில் ஒரு மகா சதிவேலை ஒன்று அரங்கேற்றம் ஆக உள்ளது என்றும், அப்பொழுது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பல தொடர் மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் நடக்கப் போவதாக சத்திய யுக வருங்கால தீர்க்கதரிசனச் செய்திக்குறிப்புகள் இங்கே நமக்கு சமீபத்தில் நிகழக்கூடிய ஒரு அரிய சம்பவத்தை எடுத்துக் கூறுகின்றது.
“வான்தேசம்“ என்று அழைக்கப்படுகின்ற லண்டன் மாநகரில் ஒரு அரிய தெய்வீக சங்கல்ப நிகழ்வு உடனே நடக்க இருப்பதாகவும், அச்சமயத்தில் நமது ஆகாயத்தில் ஒரு ஒளி என்கிற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்ற 38-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய தீர்க்கதரிசனம் உடனே நடந்து முடிய உள்ளதாக சத்திய யுக தீர்க்கதரிசனஙகள் நமக்கு ஒரு முக்கிய நிகழ்வினை சுட்டிக் காட்டுகின்றன.
பூமி தாய் வாய் பிளந்து நிற்கும் ஒரு நிகழ்வு இந்திய தேசத்தின் ஒரு எல்லையில் உடனே நடக்க உள்ளதாகவும், இச்சம்பவம் இறைவன் இந்திய மண்ணில் கால் ஊன்றியதற்கான முதல் செயலாக உலக மக்கள் எண்ண வேண்டும் என்ற செய்திக்குறிப்பை சத்திய யுக வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியானது நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
உலகம் முழுவதும் சத்திய யுகத்தின் வருங்கால நிகழ்வுகளின் அரிச்சுவடுகளை காண மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து காத்திருப்போம். அப்பொழுது உண்மைகள் உறங்காது அது ஒருநாள் வானத்தில் ஒளிவீசி நம்மை வரவேற்கும்.
--யுகம் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும். மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment