ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 1)
(முதல் தீர்க்கதரிசனம்)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவடைந்து தற்போது மூன்றாம் கட்டமாக நமது வருங்கால தீர்க்கதரிசனங்கள் யாவும் “சத்திய யுகம்“ என்ற தலைப்பில் வெளிவர உள்ளன.உலக மக்கள் யாவரும் இனி நமது வருங்கால தீர்க்கதரிசனத்தின் உண்மைச் செய்திகளை நமது “சத்திய யுகம்“ இணையதளப் பகுதியில் வாரம், வாரம் வெள்ளி அன்று காணலாம்.
உண்மைகள் உறங்குவதில்லை அது மக்கள் மத்தியில் ஒருநாள் வெளிச்சமாக வெளிவரும் என்ற நமது கூற்றின்படி நமது தீர்க்கதரினங்கள் யாவும் மெய்படும் காலமாக தற்போது “சத்திய யுகம்“ தீர்க்கதரிசனப் பகுதிகள் இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
“சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனம் என்னவெனில் நாட்டின் தலையெழுத்தை “தான்“ மாற்றப் போவதாக கூறிக்கொண்டு வெளிவரும் எந்த ஒரு நபராலும் இந்த நாட்டின் தலையெழுத்தை நிச்சயம் மாற்ற முடியாது என்றும்... மக்கள் ஏமாறும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும் முதல் தீர்க்கதரிசனம் ஒரு உண்மையை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.
நாடாளும் மன்னன் ஒருவனின் மரணச்செய்தியினை உலக மக்கள் கண்டு அச்சப்படும் மகாபாதகச் செயல் ஒன்று தற்சமயம் நடைபெற உள்ளதாகவும் இது இறைவனின் நீயாயத் தீர்ப்பு அந்த நாட்டின் மீது இறங்க உள்ளதற்கான முன்அறிவிப்பாக இது இருக்கும் என தீர்க்கதரிசனம் இங்கு கூறுகிறது.
“மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற தாரக மந்திரத்தின் உண்மைகள் சிறைச்சாலையிலிருந்து வெளிவர உள்ளதாகவும், தமிழக அரசியலில் இது பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்று முதல் தீர்க்கதரிசனப் பகுதிகளில் இடம்பெறும் செய்திக்குறிப்புகள் நமக்கு சில உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுவதாக அமைய உள்ளது.
காவேரி ஆற்றின் கரை உடைந்து பல துக்க நிகழ்வுகள் நடக்க உள்ளதாகவும், அது அந்த மாநிலத்தின் மீது இறைவன் வழங்கும் நீயாயத் தீர்ப்பாக அமைய உள்ளதாக சத்திய யுக தீர்க்கதரிசனப் பகுதியானது இங்கு கூறும் ஒரு உண்மைக் கூற்றாகும்.
மாற்றான் ஒருவனின் அம்பலம் ஒரு ஆன்மீகத்தலத்தில் வெட்ட வெளிச்சமாகும் என்றும், இது தமிழகத்திற்கு ஒரு அவப்பெயராக தற்போது அமைய உள்ளதாக தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன. உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்கதரிசனப் பகுதியில் வெளிவந்த 7-ம் தீர்க்கதரிசனத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டுமென தீர்க்கதரிசனப் பகுதியானது நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
தமிழகத்திற்கு ஒரு மாபெரும் புயல் ஒன்று தற்போது ஏற்பட உள்ளதாகவும், அது பல பலத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளதாகவும், “சத்திய யுக தீர்க்கதரிசனத்தின்“ முதல் பகுதி நமக்கு தெரிவிக்கும் உண்மை நிகழ்வாகும்.
காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை படைக்க இறைவனின் சேனைகள் யாவும் வானத்திலிருந்து இறங்க உள்ளதாகவும், இது உலகம் முழுவரும் பரந்து நடக்க உள்ளதாகவும் செய்திக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
குமரிக்கண்டம் தற்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அங்கு உருவாகும் பெரும்புயலால் மக்கள் பலத்த சேதங்களை காண்பார்கள் என்றும், இது வரலாற்றில் இடம்பெற உள்ளதாக “சத்தியயுக“ தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பா கண்டம் முழுவதும் பல பயங்கரவாத செயல்கள் நடைபெற இருப்பதாகவும், அதன் பேரிழப்புகளை கண்டு உலக மக்கள் அச்சம் அடைவார்கள் என்று முதலாம் தீர்க்கதரிசனப் பகுதிகள் நமக்கு சில குறிப்புகளை தருகின்றன.
தேசத்தந்தை வாழ்ந்த ஊரிலிருந்து வெளிவரும் ஒரு குழு நாட்டின் பெரும் மதிப்பை பற்றி குறை கூறுவார்கள் என்றும், அச்சமயத்தில் “ஆன்மீக புரட்சி“ ஒன்று இந்தியாவில் தலைவிரிக்க ஆரம்பிக்கும் என்றும், அப்பொழுது இந்திய தேசத்தின் வடமாநில எல்லையில் இறைவன் சார்ந்த ஒரு அதிசய நிகழ்வு நடக்கும் என்றும், அது “சத்திய யுகத்தின்“ நிகழ்காலத்தை சுட்டிக் காட்டுவதாக அமையும் என்று தீர்க்கதரிசனங்கள் மெய்பட கூறுகின்றன.
உண்மைகளின் தோற்றம் இனி வெளிச்சமிட ஆரம்பித்து விட்டதாகவும், அவை சத்திய யுகத்தின் நிகழ்வுகளை மக்களுக்கு படம்பிடித்து காட்டுவதாக அமையும் என்றும், அதுவே உண்மையின் உண்மையாக மக்கள் மனதில் நிச்சயம் வலம் வரும்.
வாருங்கள் ஒருங்கினணந்து இறை வருகைக்காக காத்திருப்போம். உலகம் முழுவதும் இறை ஆட்சி வருகிறது. அதுவே “சத்திய யுகம்“ என்பதை அறிவோம்.
--யுகம் வளரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும். மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment