ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 3)
(மூன்றாம் தீர்க்கதரிசனம்)
இன்று நமது “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனப் பகுதி 3-ம் பகுதியாகும். இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனங்கள் ஆகும்.
பொதுவாக இந்த உலகில் ஏற்கனவே பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு நபர்களால் வெளியிடப்பட்ட பல்வேறு தீர்க்கதரிசனங்களில் பெரும்பான்மையானவை ஏதும் நடக்கவில்லை என்பதே மிக, மிக முக்கியமான குறிப்பாகும். அந்த வகையில் பலரின் நம்பிக்கைகள் தீர்க்கதரிசனங்கள் மீது இருப்பது இல்லை. அவைகளை முறியடிக்கும்விதமாக நமது சத்திய யுக தீர்க்கதரிசனப் பகுதிகள் அதிவிரைவாக நடந்து முடிந்திட உள்ளன. உலக மக்களின் ஒட்டுமொத்த கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த தீர்க்கதரிசனப் பகுதியாக “நமது சத்திய யுக தீர்க்கதரிசனங்கள்“ அமைய உள்ளதாக ஒரு செய்திக் குறிப்பு நமக்கு தெரிவிக்கின்றன.
சத்திய யுகம் மூன்றாம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் அறிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி என்னவெனில் “மக்களின் மன்றங்கள்“ இனி ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் அமைப்பில் உள்ளவர்களை எச்சரிக்கை செய்யும் பல புதுமையான நிகழ்வுகள், இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் என்றும், அதில் “திரிபுரா“ மிகுந்த கவனத்திற்கு உரிய ஒன்று என்று இந்த மூன்றாம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு மிகுந்த குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.
“வெனிசுலா“ மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நிலபரப்பு என்றும், இங்கு மக்கள் கூட்டம், கூட்டமாக இறக்கும் பல சோகச்சம்பவங்கள் தொடர் சங்கிலி போன்று நடக்கும் என்றும், அங்கு உள்ள ஒரு போர்ச்சுகீசிய தேவாலயத்தில் மிகப்பெரிய அழிவுச்சம்பவம் தற்போது நடக்க உள்ளதாக இறைச் செய்திக்குறிப்புகள் இங்கே தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஒருவரின் மகன் மிகப்பெரிய விபத்தில் தற்போது இறப்பான் என்றும், இது இந்திய மாநிலத்தின் ஒரு பகுதியில் தற்போது நடக்க உள்ளதாகவும், அப்போது தமிழக அரசியல் களத்தில் சில தவிர்க்க முடியாத சம்பவங்கள் திடீர், திடீர் என்று நடக்க உள்ளதாகவும், நடிகர் ஒருவரின் அனல் பேச்சு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உடனே ஏற்படுத்தும் என்றும், இதனால் தமிழக மக்களின் மனநிலையில் பல குழப்பங்களும், சந்தேகங்களும், வீண் விவாதங்களும் உருவாகும் என்று நமது சத்திய யுக மூன்றாம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
“நல்லவன் வாழ்வான்“ என்ற வார்த்தையின் பொருள் தொணிக்க வசனம் பேசி வந்த ஒரு நடிகரை மக்கள் இந்த நேரத்தில் தங்கள் மனதில் உயரத்தில் வைத்து பார்க்கும் சம்பவம் ஒன்று தற்போது நடக்க உள்ளதாகவும், அவரின் அரசியல் பிரவேசம், நடத்தைகளை மக்கள் நினைத்து பார்த்து ஒரு மாற்றத்தை தமிழக அரசியலில் தர உள்ள ஒரு அரியச் சம்பவம் ஒன்று நடக்க உள்ளதாக இறை தீர்க்கதரிசனச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வரின் மறைவுச்செய்தியின் தாக்கம் மக்கள் மனதில் இன்னும் “அனல்“ வீசிக்கொண்டு இருக்க ஒரு “புதிய கட்சி“ ஒன்று உருவாகும் சூழ்நிலை ஒன்று தற்போது உருவாகி வருகின்றது என்றும், இது மக்களை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கும் என்ற செய்திக்குறிப்பை நமது தீர்க்கதரிசனப் பகுதி இங்கே நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
மக்கள் மனதில் இனி ஆச்சர்யங்களும், அதிசயங்களும் காணும்வகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள அனைத்து மத கோவில்களிலும், ஆலயங்களிலும், வழிபாட்டு மன்றங்களிலும், பல ஆன்மீக அதிசயங்கள் நிகழ உள்ளதாகவும், அது தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் அதிகமாக தென்படும் அதிசயங்கள் பல நிகழ உள்ளதாக நமது “சத்திய யுக“ வருங்கால தீர்க்கதரிசனப் பகுதி இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. “வைத்தீஸ்வரன்“ ஆலயம் இதில் முக்கியத்துவம் பெறும் என்பது சிறப்புச் செய்தியாகும்.
“கல்கத்தா“ மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு உருவாகும் “இனக்கலவரம்“ ஒன்று இந்திய மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைய உள்ளதாக நமது தீர்க்கதரிசனப் பகுதி இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
“திருவன்வலசு, கன்னியாகுமரி, பேச்சுப்பாறை, முத்தழகுப்பட்டணம், தேவனாங்குறிச்சி, பேச்சுடையார் பாளையம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகள் என நமது சத்திய யுக தீர்க்கதரிசனப் பகுதியானது நமக்கு குறிப்புகளை தருகின்றன.
வேற்றுகிரகவாசிகளை இனி உலக மக்கள் காணும் பல அரியச் சம்பவங்கள் இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் நடக்க இருப்பதாகவும், ALIEN பற்றிய செய்திகளை இனி “NASA“ (நாசா) என்கிற விண்வெளி அமைப்பு பல உண்மைகளை மக்கள்முன் சொல்ல உள்ளனர் என்றும், இது மக்கள் பல வியத்தகு ஆச்சர்யங்களை எதிர்கொள்ளும் விதமாக அமைய உள்ளதாக நமது “சத்திய யுகம்“ தீர்க்கதரிசனத்தின் 3-ம் பகுதி நமக்கு தெரிவிக்கும் சில உண்மைகளாகும்.
“சீன தேசத்தில்“ பூமி அமிழும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இனி அங்கு நடக்க உள்ளதாகவும், பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பூமிக்குள் புதையுண்டு மாயமாகும் நிகழ்வுகள் பல நடக்க இருப்பதாக நமது இறைச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தென்சீனாவின் ஒரு மாகாணத்தில் (சிச்சுவான்) பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளால் மக்கள் மரண பீதியில் உறைய உள்ளனர் என்றும், இதை எவராலும் தடுக்க முடியாது என தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் செய்திக்குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
பூமி திரட்டு ஒன்று தஞ்சைப் பகுதியில் தற்போது கிடைக்க உள்ளதாகவும், முதலாம் இராஜராஜ சோழனின் அற்புதமான விஷயங்களை தெரிவிக்கும் பகுதியாக அது இருக்கும் என நமது வருங்கால தீர்க்கதரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கும் ஒரு தித்திப்பான செய்திக்குறிப்பாகும்.
மனிதக் குலத்தின் தொண்மையான வரலாற்றின் படிமங்களை தாங்கிய லெமூரியா என்ற கண்டத்தின் ஒரு சிறு பகுதி கடலை விட்டு மேலே வர உள்ளதாகவும், அது ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியிலிருந்து வெளிப்படும் என்றும், “லெஸ்முகி“ என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தை ஆராய்ச்சியாளர்கள் அப்பொழுது வெளியிட்டு மிகுந்த ஆச்சர்யங்களை தர உள்ளனர் என்றும், நீரின் அடியில் மற்றொரு உலகம் இருந்தததற்கான ஆதாரங்களை இந்த கடல் நிலப்பரப்பின் எச்சத்திலிருந்து நமது ஆய்வாளர்கள் கண்டறியும் ஒரு அற்புத நிகழ்வு நடக்க உள்ளதாக நமது தீர்க்கதரிசனக் குறிப்புகள் இங்கே சுட்டிக் காட்டுகின்றன.
இறைவன் வெளிப்படும் இறுதிசபை ஏற்கனவே மக்கள் மத்தியில் தோன்றிவிட்டது என்றும், அச்சபையை தேடி மக்கள் ஓடி வரும் பல நிகழ்வுகள் இனி உலகம் முழுவதும் நடைபெற உள்ளது என்றும், உலகத்தினை ஆளும் இறைவனுடைய அற்புதங்களை அந்த சபையில் உள்ள பலர் பெற்றிருப்பார்கள் என்றும், இவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும், இவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும், இவர்களை இறைவனே அறிமுகப்படுத்தும் அற்புத செயல்கள் பல, தமிழகத்தில் மட்டுமே தற்போது துவங்கிட இருப்பதாகவும், இவர்கள் தலைவன், தலைவி, தொண்டன் என்ற பாகுபாட்டை விட்டவர்கள் என்றும், “அனைவரும் ஒருவரே“ என்ற தத்துவத்திற்குள் அடங்கியவர்கள் என்ற குறிப்பை இங்கே சத்திய யுக தீர்க்கதரிசனப் பகுதியான 3-ம் பகுதி மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றது.
அற்புதங்களை தாங்கிய அந்த இறுதி இறைசபையில் ஏற்கனவே இறைவனின் அவதாரச் செய்திக்குறிப்புகள் எழுத்தின் வடிவத்தில் இருக்கும் என்றும், அந்த சபையில் ஏற்கனவே இறைவனின் “திருவிளையாடல்“ ஒன்று நடந்து முடிந்திருக்கும் என்றும், திரித்துவ தத்துவத்தின்படி அங்கு முப்பெரும் தேவிகளின் அற்புதங்களும், பல விளையாட்டுகளும் நடந்திருக்கும் என்றும் அதற்கான சான்றுகள் பல அந்த சபையில் இடம் பெற்றிருக்கும் என்றும், அங்கே புனிதர்களின் ஆன்மாக்கள் பல அங்குள்ளவர்களிடையே “எழுப்புதல்“ என்ற ஆசீர்வாத நிகழ்வுகள் பல நடந்திருக்கும் என்றும், புனிதர்களின் புண்ணியங்களை அச்சபையின் உறுப்பினர்களில் பலர் வரமாக பெற்றிருப்பார்கள் என்றும், அவர்கள் அனைவருமே இளமையின் தோற்றத்தை தாங்கியவர்களாக இருப்பார்கள் என்ற முக்கிய இறைகுறிப்பை இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி வெளிச்சமிட்டு காட்டுகிறது.
இறைவனின் வருகை நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்றும், அவரின் வருகைக்கான அனைத்து ஆயத்தங்களும் இந்த பூமியில் நிகழ துவங்கி விட்டன என்றும், அதன் அறிகுறியே “அழிவுகள்“ என்றும், இந்த அழிவுச் சம்பவங்கள் யாவற்றையும் மக்கள் “கலி காலத்தில்“ தற்போது நடந்து வருகிறது என்று நம்பி வருகிறார்கள் என்றும், அது முற்றிலும் தவறான கருத்து என்று இங்கே இறைக்குறிப்பு நமக்கு தெரிவிக்கின்றது.
கலிகாலத்தின் நிகழ்வுகளாக பொதுவாக மக்கள் வாழ்வும், அவர்களின் வாழ்வியல் சூழ்நிலைகள், குணநலன்கள், தர்மம் அழியும் நிகழ்வுகள் மட்டுமே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்றும், ஆனால் இறைவன் இப்பூமியை மட்டுமின்றி அனைத்து லோகங்களையும் பூமியிலிருந்து ஆளப்போகிற அந்த காலத்திற்கு “சத்திய யுகம்“ என்றும், அவர் வருகையின் போது பேராபத்துகளும், அழிவுகளையும் மக்கள் காண்பார்கள் என்றும், இதுவே சத்திய யுகம் பிறந்து இறைவன் வருகை இப்பூமியில் நடக்க இருப்பதற்கான அறிகுறிகள் என மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என, நமது சத்திய யுக வருங்கால தீர்க்கதரிசனத்தின் 3-ம் பகுதி நமக்கும், உலக மக்களுக்கும் ஒரு முக்கியச் செய்தியினை சுட்டிக் காட்டுகின்றது. ஆகவே இப்பொழுது நடந்து வரும் யுகம் “சத்திய யுகமே“ என்று மக்கள் உணர வேண்டும் என செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
நமது ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள 28,29,30 என்ற மூன்று தீர்க்கதரிசனங்களை இங்கே நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், அதன் நிகழ்வுகள் தற்போது துவங்கி விட்டன என்றும், அதன் வழியாக மக்கள் இனி “உண்மைகள் உறங்காது“ அது ஒருநாள் சத்தியமாக இப்பூமியில் வலம் வர உள்ளது என்றும், அந்த சத்திய யுகத்தின் நீதிபதியான இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் தற்பொழுது பூமி எங்கும் இறங்கிட உள்ளது என்றும், அந்த இறைவனை காண நாம் அனைவரும் அதுவரை காத்திருப்போமாக.
--யுகம் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும். மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
No comments:
Post a Comment