Friday 25 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 14)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 14)
(பதினான்காம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 14-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 14-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் பெற்றவை.


    14-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது “வரும் ஜுன் மாதம்“ மிகவும் முக்கியத்துவம் பெற்ற மாதம் என்றும், அந்த மாதத்தில் தமிழகத்தில் பல மழை வெள்ளங்கள் தொடர்ச்சியாக உருவாகி பலத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளன என்றும், தமிழகத்தின் நிலை வெள்ளக்காடாக மாறப் போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.




    தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும் 2018 ஜுன் மாதம் முதல் 2018 டிசம்பர் மாதம் வரை பல அழிவுச் சம்பவங்கள் உலக நாடுகள் முழுவதும் நடைபெற உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது குறிப்பை பதிவு செய்கிறது.

    இந்த காலக் கட்டத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டு உள்ள “ஆகாயத்தில் ஒரு ஒளி“ எனும் வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெற்ற 32-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெற்ற பல்வேறு குறிப்புகள் நிகழும் காலமாக இக்காலக் கட்டம் இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


    “குரங்கணி மலை தீவிபத்து“ பற்றிய ஒரு செய்தி தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும், இதே போன்ற மற்றொரு விபத்து நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே எச்சரிக்கை ஒன்றை பதிவு செய்கிறது. பசுமை நிறைந்த ஒரு மலையில் இச்சம்பவம் நடக்க இருப்பதாகவும், இதனை மக்கள் தவிர்க்க முடியும் என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது. அந்த பசுமையான மலையில் பல உயிர்வாழ் கொடிய விலங்குகள் இடம் பெற்றிருக்கும் என்பதே அதன் குறிப்பாகும்.


    “மாங்கனி நகரமான சேலம் தனது இறையாண்மை தன்மைகளை மக்களிடையே வெளிப்படுத்திட காத்து உள்ளதாகவும், இனி சேலம் மாநகரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார கிராமங்கள் தோறும் இறை அதிசயங்கள் அதிகமாக நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


    “சூப்பர் ஸ்டார் ரஜினி“ அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சுக் கூட்டங்கள் தற்போது அதிகமாக நடக்க இருப்பதாகவும், அப்பொழுது மற்றொரு நடிகரின் அரசியல் முனைப்பு மிகவும் தீவிரம் கொண்டு, தமிழக அரசியல் களத்தை இன்னும் அதிகம் விறுவிறுப்பு அடையச் செய்யும் என்றும், அச்சமயத்தில் இந்திய தேர்தல்துறை ஒரு குறிப்பை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் மெய்பட இங்கே தெரிவிக்கின்றது.


    “இணைய தளங்களில்“ பரவி வரும் வதந்திகளை இனி மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும், இனி வரும் நிகழ்வுகளின் தன்மைகளை உலக மக்கள் நமது தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள குறிப்புகளை கொண்டு அறிந்து கொள்வார்கள் என 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை தெரிவிக்கின்றது.


    இமயமலையின் தென்பகுதி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கே பூமி சார்ந்த புவி அதிர்வுகள் அதிகம் நடைபெற இருப்பதாகவும், இதனால் இந்தியாவின் வட மாநிலங்களுக்கு இது போதாத காலமாக இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே புவி சார்ந்த ஒரு குறிப்பை பதிவு செய்கிறது.


    “தென் கைலாயம்“ என்று அழைக்கப்படுகின்ற சதுரகிரியில் ஒரு மகா சோகச் சம்பவம் ஒன்று நடைபெற போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியினை இங்கே பதிவு செய்கிறது. மழைக் காலத்தில் மக்கள் பாதுகாப்பான பயணங்களை திட்டமிட்டபடி உரிய ஆட்கள் உதவியுடன் மட்டுமே செல்ல வேண்டும் என ஒரு குறிப்பை 14-ம் தீர்க்கதரிசனம் மெய்பட எடுத்துக் கூறுகிறது.


    “மத்திய சென்னை“ மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்பது மிக, மிக முக்கியத்துவம் பெற்ற செய்தி குறிப்பு என்றும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்பட வேண்டும் என 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்தியினை இங்கே பதிவு செய்கிறது.


    நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காவேரிபட்டணம், முட்டம் போன்ற பகுதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகளாகும். இங்கே பல சோகச் சம்பவங்கள் நடக்க இருப்பதாக 14-ம் தீர்க்கதரிசனம் எச்சரிக்கை செய்கிறது.


    “பார் போற்றும்“ மாதவனின் அற்புத செயல் ஒன்று இப்பூமியின் மீது இறங்கிட உள்ளது என்றும், இறைவனின் வருகையை உறுதி செய்வதாக இச்சம்பவம்  அமையும் என்றும், இது நடக்கும் தினம் ஒரு அமாவாசை தினம் என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


    உலகில் கடல் கடந்த தேசங்களில் மனித குலத்தின் பொக்கிஷங்களான கலைகளை இந்த உலகின் கடைகோடிக்கும் கொண்டுச் சென்ற மக்கள் தமிழர்களே ஆவார்கள். அந்த வகையில் இந்திய தேசத்தில் ஒரு தொல்பொருள் ஆய்வில் இதன் உண்மை தெரிய வர உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை மெய்பட எடுத்துக் கூறுகிறது.

    இறைவன் இடம்பெறும் அந்த இறுதி சபையை இனி உலக மக்கள் தேடப் போகிறார்கள் என்றும், அவ்வாறு தேடி வரும் உலக மக்களின் கைகளில் இறைவன் இடம் பெறும் அந்த இறுதி சபையை பற்றிய பல்வேறு குறிப்புகளை வைத்திருப்பார்கள் என்று 14-ம் தீர்க்கதரிசனம் இங்கே மெய்பட எடுத்துக் கூறுகிறது.


    தமிழக அரசியல் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளதாகவும், அதனை நிருபிக்கும் வகையில் தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது. அரசியல் பிண்னணி  இல்லாத ஒருவரின் ஆவேசப் பேச்சு அச்சமயத்தில் மேடை தோறும் ஒரு எழுச்சியை உண்டு பண்ணும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

    “மாற்றான் தோட்டத்து மல்லிகையும்“ மணக்கும் என்ற ஒருவரின் வரிகள் இனி வரலாற்று வரிகளாகவும், நினைவுகளாகவும் தமிழகத்தில் மாறிடப் போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


    “கப்பல் ஓட்டிய தமிழன்“ வ.உ.சி.யின் பிறந்த ஊரிலிருந்து ஒருவன் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து, அது சாதிக் கட்சியாக கொண்டு செல்வான் என்றும், அந்த கட்சி சில நாட்கள் தமிழகத்தில் பல கலவரங்களை ஏற்படுத்தும் என்றும், இதற்கு நடிகர் ஒருவர் துணை போவார் என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே ஆழமாக பதிவுச் செய்கிறது.

 

    மன்னார் வளைகுடா புயல் தற்போது உருவாகும் சூழல் ஏற்பட்டு விட்டது என்றும் இதன் கடும் தாக்குதல் பல சேதங்களை ஏற்படுத்த உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற 3,4,5-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற பல குறிப்புகள் தற்போது நடைபெறும் காலமாக இக்காலம் இருக்கும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


    இறைவனின் இறுதிசபையின் “திருநாமம்“ இன்னும் சில நாட்களில் உலக மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றும், இச்சபையின் காரண கர்த்தாவாகிய ஒருவனின் ஆன்மாவை இனி உலக மக்கள் தமது கனவுகளிலும், தியானத்திலும், புறக்கண்களிலும் காண்பார்கள் என 14-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

    இந்த உலகத்தை மறு சீரமைப்பதற்கு கொண்டு செல்ல இறைவன் ஆயத்தமாகிவிட்டார் என்றும், அவரின் திருத்தாண்டவத்தை காண தேவர்களும், சித்தர்களும் தயாராகி விட்டனர் என்றும், இதுவே இவ்வுலகம் காண உள்ள “ஊழிக்காலம்“ என்று உலக மக்கள் அறிய வேண்டும் என 14-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


    செல்லாத்தா, மாரியாத்தா என்று மக்களால் அழைக்கப்படுகின்ற “ஸ்ரீசமயபுர மாரியம்மனின்“ அற்புதங்களை இனி தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களும் அறியும் காலம் இப்பொழுது என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறது.

    உலக மக்கள் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும், பண்பாளர்களாகவும், நல்லவர்களாகவும், தர்ம சிந்தனை உள்ளவர்களாகவும் அவர்கள் வாழ வேண்டுமெனில் அவர்களுக்குள் பெரும் மாற்றங்கள் வர வேண்டும். அவ்வித மாற்றங்களை மக்கள் பெற வேண்டுமெனில் “சத்திய யுகத்தினை“ பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சத்தியம், தர்மம், நீதி இவைகளின் பெரும்பங்கு சத்திய யுகத்தில் இடம் பெறும் பிராஜாதிபதிகளையே சேரும். அத்தகைய பிரஜாதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கால கட்டமாக வரும் காலக் கட்டம் அமைய உள்ளதாக 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே ஆழமாக பதிவு செய்கிறது.


    உண்மைகளின் வெளிச்சம் இந்த உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது என்றும், அதன் தீவிரக் காலக்கட்டம் தற்போது என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

    இறைவனின் வருகையானது இப்பூமியின் மீது என்பது முழுமை பெற்ற ஒரு வரலாறாக மாறிவிட்டது என்றும், அந்த வரலாற்றினை அறியும் காலமாக இக்காலம் உள்ளது என்று 14-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை இங்கே தெரிவிக்கின்றது.

    இறைவனை காணும் முன்பு அவரின் அற்புதங்களை உணர ஆரம்பித்து விடுவோம் என்ற கூற்று மெய்பட உள்ளதாகவும், அதனை உணர்ந்து அறிய நாம் காத்திருப்போமாக.

--யுகம் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :-
இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம். இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக்குறிப்புகள் அனைத்துமே நடைபெறும். மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.

2 comments: