Friday, 25 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 14)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 14)
(பதினான்காம் தீர்க்கதரிசனம்)

    “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 14-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 14-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் மிக, மிக முக்கியத்துவம் பெற்றவை.


    14-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள இருப்பது “வரும் ஜுன் மாதம்“ மிகவும் முக்கியத்துவம் பெற்ற மாதம் என்றும், அந்த மாதத்தில் தமிழகத்தில் பல மழை வெள்ளங்கள் தொடர்ச்சியாக உருவாகி பலத்த சேதங்களை ஏற்படுத்த உள்ளன என்றும், தமிழகத்தின் நிலை வெள்ளக்காடாக மாறப் போவதாக 14-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.

Friday, 18 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 13)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 13)
(பதிமூன்றாம் தீர்க்கதரிசனம்)

    “ சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனம் 13-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் குறிப்புகளும், கருத்துக்களும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.


    13-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக நாம் காணும் தீர்க்கதரிசனம் என்னவெனில் “மக்களால் நான், மக்களுக்காக நான்“ என்ற முன்னாள் தமிழக முதல்வரின் மிக அருமையான ஒரு சொர்க்கம் போன்ற இரகசியம் ஒன்று தற்பொழுது கண்டறியப்பட்டு, மக்கள் அறியும்படி ஒரு ஊடகம் செய்தியை வெளியிடும் என்றும், அது ஒரு உயில் சாசனமாக இருக்கும் என்பதே இன்றைய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவம் என முதலாம் தீர்க்கதரிசனம் குறிப்பை தருகின்றது.

Friday, 11 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 12)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 12)
(பண்ணிரெண்டாம் தீர்க்கதரிசனம்)

“சத்திய யுகத்தின்“ வருங்கால தீர்க்கதரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 12-ம் பகுதியாகும். இது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

தீர்க்கதரிசனங்கள் யாவும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இந்த காலத்தின் சூழ்நிலைகளை எவராலும் கணிக்க முடியாத அளவில் நிகழ்வுகள் நடக்கப் போவதாக 12-ம் தீர்க்கதரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு ஒரு செய்தியை குறிப்பிடுகின்றது. அதாவது வரக்கூடிய சுனாமி, மழை, புயல் என இயற்கையின் பேரிடர்களை இனி ஆராய்ச்சியாளர்கள் கூட கணிப்பது தவறாக இருக்கும் என்றும், ஆனால் சத்திய யுக தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

Friday, 4 May 2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 11)

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 11)
(பதினொன்றாம் தீர்க்கதரிசனம்)

    இன்று “சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரிசனத்தின் 11-ம் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை இங்கு காண உள்ளோம். இந்த 11-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் குறிப்புகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தைப் பற்றி எடுத்துக் கூறும் நிகழ்வுகளின் தொகுப்பாகும்.

    இந்த 11-ம் தீர்க்கதரிசனத்தில் இன்று முதலாவதாக நாம் காண இருப்பது என்னவெனில், “இந்திய தேசத்தின் வட எல்லையில்“ மிகப்பெரிய சோகச் சம்பவம் ஒன்று நடைபெற இருப்பதாகவும், இது ஆன்மீகம் சார்ந்த பகுதியில் நடைபெறக் கூடிய மிகப்பெரிய சோகச் சம்பவமாக இருக்கும் என்றும், இந்திய ஆன்மீக வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கவே முடியாது என்று 11-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே நமக்கு தெரிவிக்கின்றது.