ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3)
சத்திய யுகம் (பகுதி 6)
(ஆறாம் தீர்க்கதரிசனம்)
“சத்திய யுகம்“ எனும் வருங்கால தீர்க்கதரினத்தில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 6-ம் பகுதியாகும். இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளும், செய்திகளும் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்க்க போவதாக ஒரு செய்திக் குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே பதிவு செய்கிறது.
உலக வரலாற்றில் இடம் பெற உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றில் தற்போது உருவாகும் புயல் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிடப் போகிறது என்றும், இது “சுனாமி“ எனும் பேரலைகளால் உருவாகும் பேராபத்து என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. கடல் பரப்பில் உள்ள பல நகரங்கள் இதனால் அழிவிற்கு உட்படுத்தப்பட போவதாகவும் இது இறைவனின் நீயாயத்தீர்ப்பில் நடந்து முடியப் போகும் சம்பவம் என்று ஒரு செய்திக்குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக் காட்டுகின்றது.