Friday 11 August 2017

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 2)
உண்மைகள் உறங்குவதில்லை (பகுதி 15)

உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 15-ம் பகுதி)

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம் பெற உள்ள தீர்க்கதரிசனம் 15-ம் தீர்க்கதரிசனம் ஆகும். இந்த 15-ம் தீர்க்கதரிசனம் பல முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகும்.


    இன்று இந்த 15-ம் தீர்க்கதரிசனத்தில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ளவிருக்கும் தீர்க்கதரிசனம் என்னவெனில் தமிழகத்தில் மழையின் தீவிரமும், பல நோய்களின் தாக்கமும் மக்கள் மீது பலத்த சேதங்களை உருவாக்க உள்ளதாகவும், நடப்பு மாதமான ஆகஸ்டு 15 முதல் ஏப்ரல் 2018 வரை இதன் தீவிரம், பகுதி பகுதியாக நிகழும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மிக, மிக முக்கியமான ஒரு குறிப்பை இங்கே சுட்டிக்காட்டுகின்றது.



    “கல்கத்தா“ நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்றும், கடல், மழை சீற்றங்களால் அங்கு மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    உலக வரலாற்றில் ஒரு புதிய செய்தியை தற்போது ‘ NASA ’ என்கிற அமைப்பு தனது அறிக்கையின் வாயிலாக மக்கள் குலத்திற்கு தெரிவிக்க இருப்பதாகவும், இது மக்கள் எதிர்பார்க்காத ஒரு புதிய செய்தியாக இருக்கும் என்றும், உலக மக்கள் வியப்பிலும், ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து போவார்கள் என 15-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சியின் அதிசய நிகழ்வு ஒன்று வரும் மாதத்தில் நடக்க உள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக அமைய உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.


    ஜப்பான் நாட்டில் பூமி அதிர்வானது 7.8 ரிக்டர் அளவில் தற்போது ஏற்பட இருப்பதாகவும், அது பலத்த சேதங்களை ஏற்படுத்திட இருப்பதாகவும், சுனாமி என்ற பேரலையும் உருவாகி பலத்த சேதத்தை ஏற்படுத்தப் போகிறது என்று 15-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


    “கோவலன்“ பிறந்த ஊரில் வரலாற்று சிறப்புமிக்க “கல்வெட்டு“ ஒன்று தற்போது மக்கள் சமூகம் கண்டறியும் என்றும், இதன் வாயிலாக தமிழகத்தின் சிறப்பையும், அதன் வளர்ச்சிப் பற்றிய செய்திக்குறிப்பை கண்டு வரலாற்று ஆய்வாளர்கள் வியந்து போவார்கள் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

 

    கலியுகம் முடிந்து சத்தியயுகம் வருகின்ற சமயத்தில் இப்பூமியில் “ஸ்ரீகல்கியின்“ அவதாரம் நிகழும் என்று பல்வேறு இறைக்குறிப்புகள் தெரிவித்தாலும், அந்த “மகா அவதாரம் ஸ்ரீகல்கி“ அவதரிக்கும் மாநிலம் “தமிழகம்“ என்பதை மக்கள் சமூகம் அறிய உள்ளதாகவும், அதே சமயத்தில் “ஸ்ரீகல்கி“ மானுட உருவில் தற்போது உலாவி வருவதாகவும், அந்த மானுட உருவத்தில் இருக்கும்  ஸ்ரீகல்கியின் ஆத்மா தக்க நேரத்தில் உலகம் முழுவதும் காட்சி தர இருப்பதாகவும், அதனை வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 7ம் நாளாக இருக்கப் போவதாக 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு மிக முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
 
 

    ஆயில்யம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண்களுக்கு வரும் மாதம் முதல் பல அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் மாதமாக இருக்கும் என்றும், இந்த நட்சத்திரம் கொண்ட ஆண், பெண்கள் இனி மக்கள் மத்தியில் உயர்வாக என்னும்படியான பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாகவும், இது ஜோதிட வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், இதற்கு காரணம் வரும் சூரியக் கிரகணமே காரணமாக அமைய உள்ளதாக 15-ம் தீர்க்கதரிசனம் மிக, மிக முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது. அந்த நட்சத்திரக்காரர்களின் தற்போதைய வயது 40-ஐ தாண்டி இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

 

    மிக, மிக முக்கியமான நிகழ்வு ஒன்று மயிலாடுதுறையில் வரும் வாரம் ஒன்றில் மிக, மிக சிறப்பாக நடைபெற இருப்பதாகவும், அது சித்தர் ஒருவரின் பிரவேசமாக இருக்கும் என்றும், அது ஒரு ஆன்மீக குடிலாக இருக்கும் என்றும், அதில் உள்ளவர்கள் ஒளியை வணங்கி, வானத்திற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தினராக இருப்பார்கள் என்றும், மச்சத்தை அடைமொழியாக கொண்ட ஒரு சித்தரே அங்கு பிரவேசிப்பார் என்றும், அவரின் வழிகாட்டுதல் 60 நாட்கள் அந்த குடிலில் நடக்கும் என்றும், அப்பொழுது அங்கு வாழும் முதியவர் ஒருவர் மரணம் எய்துவார் என்றும், இச்சம்பவத்திற்கு பிறகு அக்குடிலில் உள்ளவர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியை தேடி வருவார்கள் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

    வேளாங்கண்ணியில் மிகப்பெரிய ஒரு சோகச் சம்பவம் நடைபெற இருப்பதாகவும் வரும் மாதமொன்றில் நடக்க இருப்பதாகவும், அதனால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற பகுதியில் இன்று இடம் பெறுகின்ற 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

    “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் தற்போது வெளியிட்டு வருகின்ற தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சி இன்னும் சில வாரங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்றும், அதன்பின் சில மாதங்கள் கழித்தே நமது தீர்க்கதரிசனங்கள் மீண்டும் வெளிவரும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


    இனி வானம் சிவந்து காணப்படும் என்றும், இது பல மாதங்கள் நீடிக்கும் என்றும், இது வருகின்ற ஒரு பேராபத்தின் அறிகுறியாக மக்கள் கருத வேண்டும் என்று 15-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


    "சேலம்" இனி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், இறைவனின் மகா திருவிளையாடல் ஒன்று தற்போது நடைபெற இருப்பதாகவும், அதனைக் காண உலக மக்கள் சேலத்திற்கு படையெடுப்பார்கள் என 15-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது. இதனை காண அதுவரை நாம் உறங்காமல் காத்திருப்போம் என 15-ம் தீர்க்கதரிசனம் இங்கு சுட்டிக்காட்டுகின்றது.

--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்

குறிப்பு :-

இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.

No comments:

Post a Comment