உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் 16-ம் பகுதி)
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்கிற வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று இடம்பெறும் தீர்க்கதரிசனம் 16-ம் பகுதியாகும். இந்த 16-ம் தீர்க்கதரிசனப் பகுதியோடு “உண்மைகள் உறங்குவதில்லை“ தீர்க்கதரிசனப் பகுதிகள் நிறைவு பெறுகின்றன. அடுத்த தீர்க்கதரிசனப் பகுதியானது 6-ம் மாதம் முடிந்தபின் வெளிவரும் என்பதை 16-ம் தீர்க்கதரிசனம் மக்களுக்கு இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
இந்த 16-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று நாம் முதலாவதாக காண இருப்பது என்னவெனில் இந்தியா - சீனா உறவுக்குள் பெரும் இடைவெளி தற்போது ஏற்பட உள்ளதாகவும், வரும் மாதத்தில் ஒரு சிறிய அளவில் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும், அச்சமயத்தில் சீனா தன் கோபத்தை திபெத் மீது காட்டும் என்று 16-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.