உண்மைகள் உறங்குவதில்லை
(தீர்க்கதரிசனம் பகுதி - 3)
(தீர்க்கதரிசனம் பகுதி - 3)
உலகில் இனி நடக்கும் பல சம்பவங்களுக்கான காரண காரியங்களை எவராலும் அறிய முடியாது. ஊகிக்கவும் முடியாது. அவ்வாறு ஊகித்து வெளியிடப்படும் எச்செய்தியும் எங்கும் நடக்காது என இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஆணித்தரமாக தனது செய்தியினை இங்கு பதிவு செய்கிறது.
வெவ்வேறு மதங்கள் வெளிப்படுத்திய பல கருத்துகள் கூட இனி இப்பூமியில் நடக்காது என்றும், இனி வரும் தீர்க்கதரிசனங்கள் கூட ஏற்கனவே “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்கதரிசனப் பகுதியில் நாம் வெளியிட்ட தீர்க்க தரிசனத்தின் உண்மை நிலைகளை விளக்கும் ஒரு புதிய தீர்க்கதரிசனப் பகுதியாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனப் பகுதி இருக்கும் என்ற மற்றொரு செய்தியினை இங்கு நாம் பதிவு செய்கிறோம்.
இனி இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் தீர்க்கதரிசனங்களை நாம் காண்போம்.
வரும் காலத்திற்கான “ஒரு யுகப்புரட்சி“ ஒன்று நமது உலகத்தின் தென்பகுதியில் சில மாதங்களில் உருவாகிட உள்ளதாகவும், அது மனித இனத்திற்கான ஒரு ஆன்மீக புரட்சியாக விளங்கும் என்றும், கம்யூனிசம் வளரும் நாடுகளில் இந்த புரட்சி திடீரென்று வெடிக்கும் என்று 3-ம் தீர்க்கதரிசனம் இங்கு ஒரு குறிப்பை தருகின்றது.
மற்றொரு உலகம், அதன் நிலவுப்பற்றி செய்தியினை திடீரென்று ‘NASA’ என்கிற அமைப்பு உலக மக்களுக்கு ஒரு புதிய செய்தியினை வெளிப்படுத்தும் என்றும், அங்கு மக்கள் இனம் போன்ற வேற்றுகிரகவாசிகள் உள்ளார்கள் என்ற ஒரு புகைப்படத்தையும் அவர்கள் வெளியிடுவார்கள் என்று இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.
“ஜெருசலம்“ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், தீர்க்கதரிசனப் பகுதியான “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்ட தீர்க்கதரிசனப் பகுதியான 33-ம் தீர்க்கதரிசனத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பு தற்போது மிக, மிக அருகில் நடக்க உள்ளதாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி சிறப்பான ஒரு குறிப்பை சுட்டிக் காட்டுகின்றது.
தமிழக அரசியலில் இனி திடீர் சம்பவங்கள் பல நடக்க உள்ளதாகவும் வரும் நவம்பர் மாதம் அதற்கான மாதமாக அமைய உள்ளதாகவும், அந்த மாதத்தில் திடீர் என்று ஒரு பிரபல நடிகரின் மரணம் நிகழும் என்றும், அது இயற்கையான மரணமாக இருப்பினும், அந்த மாதம் தமிழகத்தில் பல வியத்தகு சம்பவங்கள் நடப்பதற்கான முன்அறிகுறியாக நாம் இதனை கருத வேண்டும் என்று 3-ம் திர்க்கதரிசனத்தில் இடம்பெறும் செய்தி குறிப்பு சுட்டிக் காட்டுகின்றது.
காலம் சென்ற ஒரு அரசியல்தாரரின் ஆண்வாரிசு ஒன்று தமிழகத்தில் திடீரென்று ஒரு கட்சியை ஆரம்பிக்கும் என்றும், அந்த கட்சியில் பல சினிமா பிரபலங்கள் இணைந்து பல குழப்பங்களை உருவாக்குவார்கள் என்று 3-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகிறது.
முருகப்பெருமானின் மற்றொரு சிலை தென்தமிழகத்தை நோக்கி வர உள்ளதாகவும், கேரளத்து நம்பூதரி ஒருவர் ஒரு அரிய பொக்கிஷ இரகசியத்தை செய்தித்தாள்களில் வெளியிடுவார் என்றும், அதன்பின் அந்த முருகப்பெருமானின் விக்கிரக சிலை தென் தமிழகத்திற்கு “அரசால்“ கொண்டு வரப்படும் நிகழ்வு இன்னும் ஒரிரு மாதங்களில் நடக்கப் போவதாக 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கு நமக்கு வெளிப்படுத்துகிறது.
சித்தர்களின் இராஜ்யம் இனி தமிழகத்தில் உருவாக உள்ளதாகவும், அதற்குமுன் சித்தர்களின் வெளிப்பாடுகள் சார்ந்த அதிசய நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் மக்களிடையே நடைபெறும் என்றும், அதன் முதல் நிகழ்வாக திருவண்ணாமலையில் நடக்கும் என்றும், அதனை தொடர்ந்து சதுரகிரியிலும், அதனை தொடர்ந்து பழனிமலையிலும், அதனை தொடர்ந்து “பொதிகை“ மலையிலும், அதனை தொடர்ந்து “விராலி“ மலையிலும், அதனை தொடர்ந்து நாகப்பட்டணத்திலும், அதனை தொடர்ந்து குற்றாலத்திலும், அதனை தொடர்ந்து திருச்செந்தூரிலும், அதனை தொடர்ந்து எடப்பாடி கல்வடங்கம் பகுதியிலும், அதனை தொடர்ந்து சேலம் சித்தர் மலையிலும் (கஞ்ச மலை) அதனை தொடர்ந்து சென்னை பரங்கி மலையிலும், அதனை தொடர்ந்து தீர்த்தமலையிலும் (அருர்), அதனை தொடர்ந்து கொல்லிமலையிலும், அதனை தொடர்ந்து சேலத்திலும் அதனை தொடர்ந்து கன்னியாகுமரியிலும், அதனை தொடர்ந்து தென்பொன்பரப்பிலும், அதனை தொடர்ந்து மேச்சேரியிலும், அதனை தொடர்ந்து கடலூரிலும், அதனை தொடர்ந்து கும்பகோணத்திலும், அதனை தொடர்ந்து சிவன் மலையிலும் (கொடுமுடி), அதனை தொடர்ந்து மருதமலையிலும் அதனை தொடர்ந்து மக்கள் கூடும் மகா கூட்டத்திலும் சித்தர்களின் அற்புத வெளிப்பாடுகள் நடக்க உள்ளதாக இந்த “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்கதரிசனப் பகுதியில் சித்தர்களின் வெளிப்பாட்டினை 3-ம் தீர்க்கதரிசனம் குறிப்புகளாக வெளிப்படுத்துகின்றன.
சென்னை மாநகரத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு அம்மன் ஆலயத்தில் மாபெரும் தெய்வீக சங்கல்பம் நடக்கும் என்றும், அது திருவிழாக்காலமாக இருக்கும் காலக்கட்டத்தில் நடக்கும் என்றும் இது மக்கள் மனதில் தெய்வத்தை பற்றிய ஒரு புதிய நம்பிக்கையை அது உருவாக்கும் என இந்த 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி நமக்கு மற்றொரு செய்திக் குறிப்பை தருகிறது.
வருங்காலமான ஏப்ரல் - 2018 மிக, மிக முக்கியமான ஒரு காலம் (மாதம்) என்றும், இந்த மாதத்தில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய தீர்க்கதரிசனம் நடைபெறும் என்றும் அச்சமயத்தில் மக்கள் மனதில் “உண்மைகள் எப்பொழுதும் உறங்குவதில்லை“ அவை ஒரு நாள் விழிப்படையும் என்பதை உணர்ந்து தங்கள் பாதையை தேர்வு செய்வார்கள் என்று 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி மற்றொரு குறிப்பை நமக்கு தருகின்றது.
போலியான ஒரு நபர் தமிழகத்தில் மக்களால் கண்டறியப்படுவான் என்றும், அவன் ஆன்மீகத்தை தொழிலாக கொண்டவன் என்றும், அவனின் அந்தரங்க வீடியோக்கள் இனி வெளிவர உள்ளதாக 3-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கு ஒரு புதிய செய்தியினை வெளியிடுகிறது. அந்த ஆன்மீகவாதி தலையில் தலைப்பாகை அணிந்தவன் என்றும், தனது இடது கையில் காப்பு தரித்தவன் என்ற குறிப்பையும் இந்த 3-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
உண்மைகள் உறங்காது அது ஒரு நாள் விழிப்படையும். அதனை அறிய நாம் காத்திருப்போம்.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்கள் யார், தீர்க்கதரிசனங்கள் எப்படி கிடைக்கிறது
ReplyDelete