உண்மைகள் உறங்குவதில்லை
தீர்க்கதரிசனம் இரண்டாம் பகுதி
(முதல் தீர்க்கதரிசனம் - 2017)
”ஆகாயத்தில் ஒரு ஒளி” என்ற இந்த தீர்க்கதரிசனம் பகுதியில் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனங்களில் பல நடந்துள்ளன. சில தீர்க்கதரிசனங்கள் தற்போது நடக்கும் கால கட்டத்திற்குள் பயணித்து வருகின்றன.
பொதுவாக தீர்க்கதரிசனப் பகுதிகளில் வெளியிடப்படும் தேதிகளையும், மாதங்களையும், ஆண்டுகளையும் நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது. அவை நடப்பதும், தள்ளிப் போவதும் நமது கைகளுக்குள் இல்லை. இது இறைவனின் திட்டம். அதனை நிறைவேற்றுவது அவரின் வரம்புக்குள் உள்ள ஒரு அரிய நிகழ்வாகும்.
இன்று ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்கதரிசனப் பகுதியின் இரண்டாவது அத்தியாயத்தின் வெளிப்பாடுகளை வாரம் ஒருமுறை வெளியிட உள்ளேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தீர்க்கதரிசனப் பகுதிகள் இதில் இடம் பெறும் அந்த வகையில் இன்று வெளியிடும் தீர்க்கதரிசனத்தின் தலைப்பு “உண்மைகள் உறங்குவதில்லை“ என்பதாகும். இந்த பகுதியில் இடம்பெறும் முதல் தீர்க்கதரிசனத்தைப் பற்றி இங்கு காண்போம்.
வெற்றிகளை கண்டவன் துன்பங்களை காண மாட்டான் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமான முடிவாக இருக்குமோ அதுபோன்று இனி பல நிகழ்வுகள் தமிழகத்தில் நடக்க உள்ளன. களவுகள் பல செய்து வெற்றிகளை கண்ட மாபெரும் ஒரு அரசியல்வாதி வரும் மாதத்தில் திடீரென்று மாரடைப்பால் இறக்க உள்ளார். அவரின் இறப்பானது ஒரு வெள்ளிக்கிழமை அன்று இரவு வேளையில் நடக்கும். அதன் செய்தி சனிக்கிழமை அன்று மாலையில் மட்டுமே மக்களுக்கு தெரிய வரும். அந்த அரசியல்வாதி இறந்து 30வது மணி நேரத்திலிருந்து தமிழகத்தில் அடைமழை பொழியத் துவங்கும். இந்த மழையினால் நகரப் பகுதிகள் மட்டுமின்றி கிராமபுறங்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் இன்று வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனம் இதுவாகும்.
“உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற இந்த பகுதியில் அடுத்த நிகழ்வாக தமிழகத்திலிருந்து சென்று புதுடில்லியில் வசித்து வரும் மிகப்பெரிய அரசியல் கபட நாடகத்தாரி ஒரு மிகப்பெரிய தீவிரவாதியால் சுட்டுக் கொள்ளப்படும் நிகழ்வு நடக்க உள்ளதாக தீாக்கதரிசனப் பகுதி குறிப்பிட்டு காட்டுகிறது. நாட்டை ஆளும் தகுதிவாய்ந்த பல அரசியல் பிரமுகர்களுக்கு நன்கு நெருக்கமான இவர் அந்த மரண நிகழ்வை சந்திக்கும் முன்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாதரை தரிசனம் செய்வார் என்றும் அப்பொழுது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை நடைபெறும் என்ற குறிப்பை “ உண்மைகள் உறங்குவதில்லை “ என்ற தீர்க்கதரிசனப் பகுதி இங்கு சுட்டிக் காட்டுகின்றது.
தமிழகத்தில் பல ஆன்மீகவாதிகள் தங்களை “மகான்“ “சித்தர்“ “அவதாரப்பெருமான்“ “கல்கி“ என்றெல்லாம் அடைமொழியிட்டு தங்களையே சுயவிளம்பரமிட்டு மக்களிடையே பேரும் புகழும் அடைய மக்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் இது போதாத காலமாகும்.
அந்தவகையில் தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களின் வம்சாவழி நான் ஒருவனே என்று மக்களிடையே கூறி வரும் ஒரு ஆன்மீகவாதியின் மறைவு மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையப் போகிறது என்றும், முருகப்பெருமானின் புகழ் பாடும் ஒரு அமைப்பு தன் வழியையே மறந்து போகும் அளவிற்கு பரிதாப நிலைக்குச் செல்லும் என்றும், சிற்பம், சிலை, தியானம், மலை என்றெல்லாம் புகழ் தேடும் ஒரு ஆன்மீக அமைப்பு வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஒரு திருவிழாவில் தன் பொழிவை இழக்கும் என்று தீர்க்கதரிசனத்தின் இப்பகுதி சுட்டிக்காட்டுகின்றது.
மன்னார் வளைகுடாவில் ஒரு ஆழிப்பேரலை ஒன்று தற்போது உருவாகி வருகிறது என்றும் இந்த ஆழிப்பேரலை வடக்கிலிருந்து தெற்காக 30 டிகிரி அட்ச ரேகையிலிருந்து நகர்ந்து 40 முதல் 50 மைல் (நாட்டிக்கல் மைல் வேகம்) வேகத்தில் நகர்ந்து கரையை தொட்டு கடக்கும் சமயத்தில் பல பேரழிவுகள் நடக்க உள்ளதாகவும் அப்பொழுது நங்கூரமிட்டு (நங்கூரம்) நிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய கப்பல் கடல்கரையை தொட்டு நிற்கும் என்றும்,
அந்த கப்பலின் உள்ளே பல உடல்கள் இறந்த நிலையில் அரசு கண்டறியும் என்றும் அங்கே பிரபஞ்சம் வியக்கும் அதிசியமாக சில வினோத உருவங்களின் உடல்களை கண்டு உலகமே வியக்கும் அதிசியம் நடக்கும் என்றும் இதனால் இவ்வுலகத்தில் எப்பொழுதுமே “உண்மைகள் உறங்குவதில்லை“ அவை ஒரு நாள் வெளிச்சத்திற்கு நிச்சயம் வரும் என்ற உண்மையை மக்கள் அறிவார்கள் என்று இப்பகுதி தெளிவாக கூறுகிறது.
“தென்னாடு உடைய சிவனே போற்றி” என்ற கூற்றின்படி எந்த பகுதியை சேர்ந்தவர் சிவன் என்ற தர்க்க கேள்வி தற்பொழுது ஆய்விற்காக ஒரு ஆன்மீக அமைப்பு தேர்ந்தெடுத்து தனது ஆய்வினை தமிழகத்தில் ஆரம்பிக்கும் இச்சமயத்தில் தென் தமிழகத்தில் நடக்கும் ஒரு அகழ்வராய்ச்சியில் அதிசியமிக்க ஒரு புதைபொருள் நம் தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற செய்தி வாயிலாக தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் ஒரு உண்மையை அறியப் போகும் காலமாக இக்காலம் (2017) அமைய உள்ளதாக தீர்க்கதரிசனத்தின் முதல் பகுதி இங்கு சுட்டிக் காட்டுகின்றது.
ஆகவே இனி “உண்மைகள் ஒரு போதும் உறங்காது“ என்ற கூற்று
உண்மையாக மாறும் காலத்திற்காக நாம் காத்திருப்போம்.
--உண்மைகள் தொடரும்--
ஆசிரியர். ஸ்ரீ யோகேஸ்வரன்
குறிப்பு :-
இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை. வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்.